Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

ஆசிரியர்கள் தினம் நாளை (05.09.2015) கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளிடம் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியின் போது இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான திரு. சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுக் கூறும் வகையில் ரூ.125 மற்றும் ரூ. 10 க்கான நினைவு நாணயங்களை பிரதமர் வெளியிட்டார். இந்த மொத்த நிகழ்ச்சியையும் பள்ளிக் குழந்தைகளே ஏற்பாடு செய்திருந்தனர். மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தின் முன்முயற்சியான “கலா உத்சவ்” என்ற இணைய தளத்தையும் பிரதமர் இன்று துவக்கி வைத்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைக் கல்வி பயிலும் பள்ளிக் குழந்தைகளிடையே கலைகளை ஊக்குவிக்கவும் வெளிப்படுத்தவும் உதவும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் கூறியதாவது:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு மாணவனின் வெற்றியைச் சார்ந்தே ஒரு ஆசிரியர் அறியப்படுகிறார். தாய் குழந்தையை பெற்றெடுத்தாலும் ஆசிரியரே அந்தக் குழந்தைக்கு வாழ்க்கையை தருகிறார்.

ஆசிரியரும் மாணவரும் ஒருவொருக்கு ஒருவர் முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆசிரியர்கள் பல்வேறு குழந்தைகளுடனான தங்களின் அனுபவத்தை எழுத்து மூலம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும். கல்வியில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து குழந்தைகளையும் ஆசிரியர்கள் முக்கியமாக கருதுவதுடன் அவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் . ஏ.பி.ஜே அப்துல் கலாமை நினைவுக் கூறிய பிரதமர், டாக்டர் கலாம் எப்பொழுதுமே தன்னை ஒரு ஆசிரியராக நினைவுக் கோரப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆசிரியர் பணி மீது மிகுந்த நாட்டம் கொண்டிருந்த டாக்டர் கலாம் தனது இறுதி தருணங்களை மாணவர்களுடன் உரையாடுவதிலேயே செலவிட்டார் என்று விவரித்தார்.

இன்றும் சர்வதேச அளவில் மிக முக்கியமான பொறியியலாளர்கள், மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ஆகியோரை உருவாக்க உதவி செய்யும் சிறந்த ஆசிரியர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். ஆசிரியர்களின் நோக்கம் ரோபோக்களைப் போன்ற மாணவர்களை உருவாக்காமல் மொத்த தலைமுறையையே பேணி வளர்த்து போதிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி சுபின் இரானி, மத்திய இணை அமைச்சர் திரு. உபேந்திர குஷ்வாஹா, திரு. ராம் சங்கர் கதிரியா, திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

••••••