Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஒருங்கிணைப்பைப் பாராட்டியுள்ள அவர், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது ஆடவர் ஹாக்கி அணி அற்புதமான வகையில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது! இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அணியினருக்கு வாழ்த்துக்கள். அணியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை விளையாட்டை மட்டுமல்லாமல், எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளன. இந்த வெற்றி அவர்களின் சிறந்த உணர்வுக்குச் சான்றாகும். அவர்களின் இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்”.

***

ANU/PKV/BS/DL