Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஷெராவத்தின் அசாதாரணமான நுட்பத்தை அவர் பாராட்டியுள்ளார். இது அற்புதமான சாதனைக்கு வழிவகுத்தது என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

“ஆண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு வாழ்த்துகள்.

அவரது அசாதாரணமான நுட்பம் இந்த அற்புதமான சாதனைக்கு வழிவகுத்துள்ளது. இது அவரது கடின உழைப்பு மற்றும் பயிற்சிக்கு ஒரு சான்றாகும்.”

***

ANU/PKV/BS/DL