Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கபடி மகளிர் அணி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வகையில் தங்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி மகளிர் அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். நமது கபடி மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது! இந்த வெற்றி நமது பெண் விளையாட்டு வீரர்களின் அசைக்க முடியாத உத்வேகத்திற்கு ஒரு சான்றாகும். இந்த வெற்றியால் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இந்தக் குழுவினருக்கு வாழ்த்துக்கள். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகள்”

***

ANU/PKV/PLM/DL