Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022 வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் போட்டியில் ஜோதி சுரேகா வென்னம், ஓஜாஸ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்


ஹாங்சோவில் நடைபெறும்  ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022, வில்வித்தை கலப்பு அணி காம்பவுண்ட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், ஓஜாஸ் ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் முதல் தங்கப் பதக்கம்!

கலப்பு அணி காம்பவுண்ட் போட்டியில் தங்கம் வென்ற ஜோதி சுரேகா வென்னம், ஓஜாஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களின் அசாதாரண திறமை, துல்லியம், ஒன்றிணைந்த செயல்பாடு ஆகியவை மகத்தான வெற்றியை உறுதி செய்துள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகள்.

***

ANU/AD/SMB/AG/KPG