Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 71 பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு இந்த எண்ணிக்கை ஒரு சான்றாகும் என்று அவர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முன்னெப்போதையும் விட மிக நன்றாக ஒளிர்கிறது!

71 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முன்னெப்பதும் இல்லாத சிறப்பிடத்தைப் பெற்றிருப்பத்தை நாம் கொண்டாடுகிறோம், இது நமது விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் விளையாட்டு உணர்வுக்கு சான்றாகும்.

ஒவ்வொரு பதக்கமும் கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் வாழ்க்கைப் பயணத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஒட்டுமொத்த தேசத்திற்கும் இது பெருமையான தருணம். நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

***

ANU/AD/SMB/AG/KPG