Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் 35 கிலோ மீட்டர் நடைப்பந்தைய கலப்புக் குழு போட்டியில் ராம் பாபு, மஞ்சு ராணி ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளதைப் பிரதமர் கொண்டாடுகிறார்


ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 35 கி.மீ நடைப்பந்தைய கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராம் பாபு, மஞ்சு ராணி ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“35 கி.மீ நடைப்பந்தைய கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ராம் பாபு மற்றும் மஞ்சு ராணிக்கு வாழ்த்துகள். இந்த அற்புதமான விளையாட்டு வீரர்கள் காட்டிய மகத்தான சகிப்புத்தன்மை மற்றும் உறுதி இல்லாமல் இது சாத்தியமில்லை.

 ***

 

AD/ANU/IR/RS/KPG