Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா முகர்ஜி மற்றும் சுதீர்தா முகர்ஜிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் டேபிள் டென்னிஸ்  இரட்டையர் பிரிவில்  வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா முகர்ஜி, சுதீர்தா முகர்ஜி ஆகியோருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“வெண்கலப் பதக்கம் வென்ற அய்ஹிகா முகர்ஜி, சுதீர்தா முகர்ஜி ஆகியோருக்கு வாழ்த்துகள். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும்.

இவர்களின் அர்ப்பணிப்பு, திறன், அணி செயல்பாடு  ஆகியவை முன்னுதாரணமானவை.”

***

ANU/AD/SMB/DL