Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஸ்குவாஷ் ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்றதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்


ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் தங்கப் பதக்கம் வென்ற செளரவ் கோஷல், அபய் சிங், ஹரிந்தர் சந்து, மகேஷ் மங்கவ்கர் ஆகியோரைக் கொண்ட ஸ்குவாஷ் ஆடவர் அணிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அற்புதமான வெற்றியைப் பெற்று தங்கப் பதக்கத்தை நாட்டிற்குக்  கொண்டு வந்துள்ள திறமை வாய்ந்த செளரவ் கோஷல், அபய் சிங், ஹரிந்தர் சந்துமகேஷ் மங்கவ்கர் ஆகியோரைக் கொண்ட நமது ஸ்குவாஷ் ஆடவர் அணிக்கு வாழ்த்துகள். இந்த முயற்சி பல இளம் விளையாட்டு வீரர்களை விளையாட்டில் தொடரவும், அதில் சிறந்து விளங்கவும் ஊக்குவிக்கும். மகிழ்ச்சியில் இந்தியா!

 

*******

(Release ID: 1962406)

 

ANU/AD/ SMB/KRS