Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து


ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா டி.எஸ் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஆசிய விளையாட்டு 2022-ல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்புக் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா டி.எஸ் ஆகியோரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர்களின் சாதனைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணி ஆகியவை பாராட்டுக்குரியவை என்பதுடன் அவை இந்திய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கின்றன.”

 

இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

***

ANU/AP/PLM/DL