ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனி நபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனுஷ் அகர்வாலாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒரு எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது ;
“ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈக்வெஸ்ட்ரியன் டிரஸ்ஸேஜ் எனப்படும் தனிநபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற அனுஷ் அகர்வாலாவுக்கு வாழ்த்துக்கள். அவரது திறமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
*********
ANU/ SM /PKV/ KRS
Congratulations to Anush Agarwala for bringing home the Bronze Medal in the Equestrian Dressage Individual event at the Asian Games. His skill and dedication are commendable. Best wishes for his upcoming endeavours. pic.twitter.com/nUlNr7sHKW
— Narendra Modi (@narendramodi) September 28, 2023