Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்குப பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குமாரின் திறமையையும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு வாழ்த்துகள்!

அவரது திறமையும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது.

இனிவரும் முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்.”        

***

ANU/PKV/SMB/DL