Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ  ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் படகுப்போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர்களின் அணிசெயல்பாடு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், இவர்களின் சாதனை தேசத்திற்குப்  பெருமை சேர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“படகுப்போட்டி- பிஆர் 3 கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கம் வென்ற அனிதா மற்றும் நாராயண கொங்கனபள்ளிக்கு வாழ்த்துகள்.

இவர்களின் அணிசெயல்பாடும், அர்ப்பணிப்பும் பிரமாதமாக ஒளிர்கிறது!  இந்த சாதனை தேசத்திற்குப்  பெருமை சேர்க்கிறது. ”       

***

ANU/PKV/SMB/DL