ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு குறித்துத் தாம் பெருமைப்படுவதாகவும், இவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆடவர் சதுரங்கம் பி 1 பிரிவில் (அணி) தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானி, சவுந்தர்யா பிரதான் மற்றும் அஸ்வினுக்கு வாழ்த்துகள்.
இவர்களின் திறமை மற்றும் அர்ப்பணிப்பு குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். இனிவரும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
***
ANU/PKV/SMB/DL
Congrats to Darpan Inani, Soundrya Pradhan and Ashwin for clinching the Gold Medal in Men's Chess B1 Category (Team).
— Narendra Modi (@narendramodi) October 28, 2023
Proud of their skill and dedication. All the best for the endeavours ahead. pic.twitter.com/yS7ZiZ5uXo