Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தர்பன் இனானிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இனானியின் வெற்றி உலக அளவில் இந்தியாவின் அசாதாரணத் திறமைக்கு ஒரு சான்றாகும் என்று அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் சதுரங்க பி 1 பிரிவில் (தனிநபர்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தர்பன் இனானிக்கு வாழ்த்துகள்.

இவரது அசைக்க முடியாத வலிமையும் உறுதியும் இவருக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது மட்டுமின்றி, இந்தியாவின் அசாதாரணத் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தியுள்ளது.”      

***

ANU/PKV/SMB/DL