Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் புரோன் எஸ்.எச் -1 போட்டியில் சித்தார்த்த பாபு தங்கப் பதக்கம் வென்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் ப்ரோன் எஸ்.எச்-1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சித்தார்த்த பாபுவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

கலப்பு 50 மீட்டர் ரைபிள்ஸ் ப்ரோன் எஸ்.எச் –1 போட்டியில் பிரமிக்க வைக்கும் செயல்திறனுக்காக நமது பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் சித்தார்த்த பாபுவுக்கு வாழ்த்துகள்!

அவரது இடைவிடாத துல்லியம், கவனம், அசாதாரண திறமைக்கு இந்தத் தங்கம் ஒரு சான்றாகும். இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது.

***

ANU/SMB/PKV/AG/KPG