Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் வில்வித்தை ஆடவர் இரட்டையர் – டபிள்யூ 1 பிரிவில் ஆதில் முகமது நசீர் அன்சாரி, நவீன் தலால் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் வில்வித்தை ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஆதில் முகமது நசீர் அன்சாரி, நவீன் தலால் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

வில்வித்தை ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்ற ஆதில் முகமது நசீர் அன்சாரி, நவீன் தலால் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

அவர்களின் நேர்த்தி, அணிசெயல்பாடு, அசைக்க முடியாத உறுதி ஆகியவை நம் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது. அவர்கள் எப்போதும் உயர்ந்த இலக்கை அடையட்டும். இந்த மகத்தான சாதனையை இந்தியா பெருமையுடன் கொண்டாடுகிறது

***
 

ANU/SMB/IR/RS/KPG