Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்ற அஜித் சிங்குக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற அஜித் சிங்கிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் அஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றது மிகப்பெரிய சாதனை. இந்த வெற்றி அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாகும். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

—–

ANU/SMB/PKV/KPG