ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர்-டி11 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ரக்ஷிதா ராஜூவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜுவின் அசாதாரண செயல்திறன் இந்தியர்களின் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர்-டி 11 பிரிவில் தங்கம் வென்ற ரக்ஷிதா ராஜுவுக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண செயல்திறன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியர்களின் இதயங்களை மகிழ்ச்சியால் நிரப்பியுள்ளது. அவர் இன்னும் மகத்தான சாதனைகளை நோக்கித் தொடர்ந்து பயணிக்கட்டும்.”
***
ANU/SMB/PKV/KPG
Kudos to Rakshitha Raju for clinching the Gold in Women's 1500m-T11 at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 25, 2023
Her exceptional performance and unwavering dedication fill the hearts of India with joy and admiration. May she continue to sprint towards even more illustrious achievements. pic.twitter.com/yFCfPS7KGC