சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும் க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் – க்ளாஸ் 1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சந்தீப் டாங்கிக்கு வாழ்த்துகள். அவரது அசாதாரண திறமையும் அர்ப்பணிப்பும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளன. இந்த வெற்றியால் இந்தியா மகிழ்ச்சியடைகிறது.”
******
(Release ID: 1970864)
ANU/AD/SMB/KRS
Well done Sandeep Dangi for securing the Bronze Medal in Table Tennis Men's Singles - Class 1 event. His exceptional skill and dedication have brought honor to our nation. India rejoices in this success. pic.twitter.com/UDb7iaL3AT
— Narendra Modi (@narendramodi) October 25, 2023