Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் ஆண்களுக்கான 200 மீட்டர் டி 37 பிரிவில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு


சீனாவின் ஹாங்ஜோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 200 மீட்டர் டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்ரேயான்ஷ் திரிவேதிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

‘’டி-37 200 மீட்டர் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஷ்ரேயன்ஷ் திரிவேதி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஸ்ரேயான்ஷின் வேகமும், அசைக்க முடியாத உறுதியும் தேசத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உண்மையிலேயே பாராட்டத்தக்க சாதனை.”

 

***

 

ANU/PKV/BR/KRS