Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வட்டு எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீரர் நீரஜ் யாதவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
அவரை ஒரு உண்மையான சாம்பியன் என்று அழைத்த பிரதமர், யாதவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைப்  பாராட்டினார். 
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: 

“நீரஜ் யாதவ் ஒரு உண்மையான சாம்பியன்! 
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான வட்டு எறிதல்-எஃப் 54/55/56 பிரிவில் அற்புதமான தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் யாதவுக்கு வாழ்த்துகள். அவரது தனித்துவமான வெற்றி, அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியை வெளிப்படுத்துகிறது. இந்த சாதனையால் இந்தியா பெருமிதம் கொள்கிறது.”