Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமாருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சைலேஷ் குமாருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற சைலேஷ் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 போட்டியில் அவரது செயல்திறன் அசாதாரணமானது.

அவரது உறுதியும், கடின உழைப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.” 

***

ANU/AD/SMB/AG/KPG