Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
 
அசோக்கின் அபாரமான திறமை, வலிமை மற்றும் உறுதியை அவர் பாராட்டினார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: 

“நமது  பாரா பளுதூக்கும் வீரர் அசோக்கிற்கு இது  ஒரு வெற்றிகரமான தருணம்! 
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அசோக்கிற்கு நல்வாழ்த்துகள். 
அவரது அசாத்திய திறமை, வலிமை, உறுதி ஆகியவை நம் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.”

 

AD/ PKV/ BR / KRS