ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரூபினா பிரான்சிஸுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.
ரூபினாவின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய பிரதமர், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் எஸ்ஹெச் 1 பிரிவில் ரூபினா பிரான்சிஸ் பி 2 இல் ஒரு சிறந்த வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
ரூபினாவின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி இதை சாத்தியமாக்கியுள்ளது. எதிர்கால முயற்சிகள் சிறக்க வாழ்த்துகள்.”
***
ANU/AD/SMB/DL
A great Bronze win by @Rubina_PLY in P2 - Women's 10m Air Pistol SH1 event at the Asian Para Games.
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
Rubina’s incredible dedication and perseverance have made this possible. Best wishes for the future endeavours. pic.twitter.com/niOXsmyTmk