Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் டி20 ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் 400 மீட்டர்-டி20 ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கால் மைல்  வீராங்கனை தீப்தி ஜீவன்ஜிக்குப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது செயல்பாடு மெய்சிலிர்க்கச் செய்கிறது என்று கூறிய அவர், ஓடுபாதையில் ஜீவன்ஜியின் உற்சாகம்  ஒப்பிட முடியாதது என்றார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“தீப்தி ஜீவன்ஜியின் அற்புதமான செயல்பாடு! ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர்-டி20 ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற  தீப்திக்கு வாழ்த்துகள். ஓடுபாதையில் அவரது உற்சாகம் ஈடு இணையற்றது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி நம்  அனைவரையும் பெருமைப்படுத்திய தீப்திக்குப்  பாராட்டுக்கள்.”

***

ANU/AD/SMB/DL