Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிருக்கான வி.எல் 2 படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மகளிருக்கான வி.எல் 2 படகுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிராச்சி யாதவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் முதல் பதக்கம் வென்றதன் மூலம் பிராச்சி யாதவ் இந்திய விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதித்துள்ளார்.

மகளிர் வி.எல் 2 பாரா படகுப் போட்டியில் சிறப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்ற பிராச்சி யாதவுக்கு வாழ்த்துக்கள்.

அவரது அசாத்தியமான செயல்திறன் ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியுள்ளது.

***

ANU/PKV/SMB/AG