Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்


சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

 

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் பிரவீன் குமாரின் சிறந்த செயல்திறன் மூலம் அவர் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது அசாத்திய உறுதிக்கும், கடின உழைப்புக்கும் அவரது வெற்றி ஒரு சான்றாகும். அவர் தொடர்ந்து பல உயரங்களை எட்டட்டும், அவரது சாதனைகள் மூலம் மேலும் பலருக்கு உத்வேகம் அளிக்கட்டும்என்று பதிவிட்டுள்ளார்.

***

(Release ID: 1970202)

ANU/AD/KRS