சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் கிளப் எறிதல் – எஃப்51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கிளப் எறிதலில் (எஃப் 51) வெண்கலப் பதக்கம் வென்ற அமித் சரோஹாவுக்கு வாழ்த்துகள். அவரது அர்ப்பணிப்பும், அயராத உழைப்பும் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர் தமது அபாரமான திறமைகள் மற்றும் உத்வேகத்தால் தொடர்ந்து பலரை ஊக்குவிக்கட்டும்”
——–
(Release ID: 1970117)
ANU/AD/IR/RS/KRS
Congratulations to @AmitParalympian on the impressive Bronze Medal win in Club Throw (F51) at the Asian Para Games. His dedication and relentless hard work have brought immense pride to the nation. May he continue to motivate many with his exceptional skills and spirit. pic.twitter.com/Ir8hLQgaXL
— Narendra Modi (@narendramodi) October 23, 2023