2023 ஆகஸ்ட் மாதத்தில் யூபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 10 பில்லியனைக் கடந்திருப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகமான என்.பி.சி.ஐ.யின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
“இது மிகச்சிறப்பான செய்தி! இந்திய மக்கள் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஏற்று செயல்படுவதற்கு சான்றாகவும், அவர்களின் திறன்களுக்கான மரியாதையாகவும் இது அமைந்துள்ளது. இனி வரும் காலங்களிலும் இதே நிலை தொடரட்டும்.
***
ANU/AD/PLM/AG/KPG
This is exceptional news! It is a testament to the people of India embracing digital progress and a tribute to their skills. May this trend continue in the times to come. https://t.co/MrXpYbg5Cd
— Narendra Modi (@narendramodi) September 1, 2023