Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆகஸ்ட் 15ந் தேதி அன்று தனது உரைக்கு ஆலோசனைகளை வரவேற்கிறார் பிரதமர்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2017 ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று புது தில்லியில் செங்கொட்டைக் கொத்தளத்தில் ஆற்ற உள்ள உரைக்கு பொது மக்களிடம் இருந்து ஆலோசனைகளை கேட்டுள்ளார். இதற்கென நரேந்திர மோடி செயலியில் அவர் தனி பகுதியை தொடங்கியுள்ளார். அன்றைய தினம் தான் பேச வேண்டியவை குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

“ஆகஸ்ட் 15ந்தேதி செங்கோட்டைக் கொத்தளத்தில் நான் உரை நிகழ்த்தும் போது நான் வெறும் ஊடகமாகவே திகழ்வேன். 125 கோடி மக்களின் குரல் தான் அங்கு ஒலிக்கும்.

எனது உரைக்கு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இதற்கென பிரத்யேகமாக பிரவு ஒன்றை நரேந்திர மோடி செயலியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. http://nm4.in/dnldapp ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

****