அஸ்ஸாம் மாநிலம் ஜோகிகோபாவில் பிரம்மபுத்திரா மீது (தேசிய நீர்வழிப்பாதை-2) உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் போக்குவரத்து முனையம் தொடங்கப்பட்டிருப்பதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
அஸ்ஸாம் மாநிலம் ஜோகிகோபாவில் உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் போக்குவரத்து முனையத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், பூட்டானின் நிதியமைச்சர் மேதகு லியோன்போ நாம்கியால் டோர்ஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நவீன முனையம் பல்வகை சரக்குப்போக்குவரத்துப் பூங்காவையும், உத்திசார்ந்த முக்கியத்துவம் கொண்ட ஜோகிகோபோவையும் இணைக்கிறது. இது பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுக்கான சர்வதேச துறைமுகமாகவும் இருக்கும். மேலும், அஸ்ஸாமிலும், வடகிழக்குப்பகுதியிலும் சரக்குப் போக்குவரத்தை விரிவுப்படுத்தும்.
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவாலின் எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
“நமது உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற தேடலுக்கும், முன்னேற்றம் மற்றும் வளத்திற்கான உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை ஊக்குவிப்பதற்கும் இது மிக முக்கியமானதொரு சேர்க்கையாகும்.”
***
TS/SMB/KV/KR
A noteworthy addition in our quest for improving infrastructure as well as encouraging inland waterways for progress and prosperity. https://t.co/2heHuWxagw
— Narendra Modi (@narendramodi) February 18, 2025