Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருந்தக்கூடிய ஆல்கஹாலை ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் விதமாக தொழிற்துறைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டம் 1951ன் முதல் அட்டவணையில் திருத்தம்


அருந்தக்கூடிய ஆல்கஹாலை ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் விதமாக தொழிற்துறைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டம் – 1951ன் முதல் அட்டவணையில் திருத்தத்தை மேற்கொள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது, இந்த சட்டத்திருத்தம் சட்ட ஆணையத்தின் 158-வது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைப் படுத்துதல்) சட்டம் – 1951ன் முதல் அட்டவணையில் தற்போது முதல் பிரிவில் காணப்படும் 26 நொதித்தல் தொழிற்சாலைகள் என்பதற்கு பதிலாக 26 ஆல்கஹால் தொழிற்சாலைகள் (அருந்தக்கூடிய ஆல்கஹால் அல்லாத) என்று திருத்தப்படும். இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொண்ட பின்னர் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகார வரம்பு தொடர்பாக நீண்ட காலம் நிலுவையில் உள்ள குழப்பங்கள் தீர்க்கப்படும். அருந்தக்கூடிய ஆல்கஹால் மற்றும் தொழிற்சாலைகள் பயன்படுத்தக்கூடிய ஆல்கஹால் என்பவற்றுக்கு தீர்வுகாணப்படும். இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே சம நிலை ஏற்படுத்தப்படும். ஆல்கஹாலை தவறாகப் பயன்படுத்துவது நீக்கப்படும். அருந்தக்கூடிய ஆல்கஹாலை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இனி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும். அருந்தக்கூடிய ஆல்கஹாலை உற்பத்தி செய்வது குறித்த பொறுப்புகள் தற்போது மாநில அரசுக்கு மாற்றப்படும்.

பின்னணி

அருந்தக்கூடிய ஆல்கஹாலை ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்கும் விதமாக தொழிற்துறைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்துதல்) சட்டம் 1951ல் மேற்கொள்ளப்பட உள்ள சட்டத்திருத்தம் மத்திய அரசுக்கும், பீகார் டிஸ்டிலரி நிறுவனத்திற்கும் நடந்த வழக்கில் 1997 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அருந்தக்கூடிய ஆல்கஹால் தயாரிப்பின் அதிகாரத்தை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலும், தொழிற்சாலைகளுக்காக தயாரிக்கப்படும் ஆல்கஹால் குறித்த கட்டுப்பாடு மத்திய அரசுக்கும் இருக்க வேண்டும். அதன்பின்னர், சட்ட ஆணையம் தனது 158-வது அறிக்கையில், 1951 ஆம் ஆண்டு தொழிற்சாலை குறித்த முதல் அட்டவணையில் 26-வது துணைப் பிரிவில் மாற்றத்தை கொண்டுவர பரிந்துரைத்தது.

ஆயினும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், தொழிற்சாலை மேம்பாடு மற்றும் கொள்கை குறித்த துறை அமைச்சகங்களின் ஆலோசனையுடனும் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை உத்தேசித்துள்ளது.

•••••••