Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


அருணாச்சலப்பிரதேச மாநில உதய தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அருணாச்சலப்பிரதேசம் செறிவான பாரம்பரியங்களுக்காகவும் இயற்கையோடு நெருக்கமான பிணைப்புக்காகவும்  பெயர்பெற்ற மாநிலம் ஆகும் என திரு மோடி கூறியுள்ளார்.  அருணாச்சலப்பிரதேசம் தொடர்ந்து செழிப்படையட்டும் என்றும், அதன் முன்னேற்றப் பயணமும் நல்லிணக்கமும் வரும் ஆண்டுகளுக்கும் தொடரட்டும் என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“அருணாச்சலப்பிரதேச மக்களுக்கு மாநில உதய தினத்தையொட்டி வாழ்த்துக்கள்!  இந்த மாநிலம்

செறிவான பாரம்பரியங்களுக்காகவும் இயற்கையோடு நெருக்கமான பிணைப்புக்காகவும் பெயர்பெற்றதாகும்.  கடின உழைப்புமிக்க அருணாச்சலப்பிரதேச மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து மகத்தான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.  அவர்களது எழுச்சிமிக்க பழங்குடியின பாரம்பரியம், வியப்பூட்டும் பல்லுயிர்த்தன்மை  ஆகியவை இந்த மாநிலத்தை சிறப்புமிக்கதாக மாற்றியுள்ளன.  அருணாச்சலப்பிரதேசம் தொடர்ந்து செழிக்கட்டும், அதன் முன்னேற்றப் பயணம் மற்றும் நல்லிணக்கம் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து உச்சங்களை அடையட்டும்”

***

 

TS/PKV/KV/KR/DL