பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் சாசன (ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக் கூடியது) உத்தரவில் (1954) திருத்தம் கொண்டுவதற்காக, 2017ம் ஆண்டு அரசியல் சாசனத் திருத்தம் (ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக் கூடியது) திருத்தம் கொண்டு வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்புதல் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) விதிப்பு நடைமுறைப்படுத்த வழியேற்படும். இதற்கான அரசியல் சாசன (ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தக் கூடியது) திருத்தச் சட்டம் (2017) ஏற்கெனவே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து இந்திய அரசிதழில் (Gazette of India) 2017ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.