Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்


அரசின் சந்தை 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருடாந்திர கொள்முதல் செய்து சாதனை செய்திருப்பதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இக்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

அரசின் சந்தை @GeM_India ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! முந்தைய ஆண்டுகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும். 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இக்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

 

*****