அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சதுக்கத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்தி மோடி இன்று உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சகோதரி லதாவின் பிறந்த தினம் ஒவ்வொரு இந்தியரின் வணக்கத்துக்குரியதும் மற்றும் பாசத்திற்குரியது என்றார். அன்னை சந்திரகாந்தாவை வழிபடும் நவராத்திரி விழாவின் மூன்றாவது நாளையும் அவர் கொண்டாடினார். வணங்கும் ஒருவர், கடுமையான தவத்தில் ஈடுபடும்போது, அன்னை சந்திரகாந்தாவின் அருளால் அவரோ அல்லது அவளோ தெய்வீகக் குரல்களை அனுபவித்து உணர்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். “சகோதரி லதா, அன்னை சரஸ்வதியை வணங்குபவர்களில் ஒருவர்.அவர், தனது தெய்வீக குரலால் உலகம் முழுவதையும் வியக்க வைத்தார். சகோதரி லதா தவம் செய்தார், நாம் அனைவரும் வரம் பெற்றோம்!” என்று பிரதமர் குறிப்பிட்டார். அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அன்னை சரஸ்வதியின் பிரமாண்டமான வீணை, இசைப் பயிற்சியின் அடையாளமாக மாறும் என்று மோடி சுட்டிக்காட்டினார். சதுக்கத்தில் உள்ள ஏரியில் ஓடும் நீரில் பளிங்குக் கற்களால் செய்யப்பட்ட 92 வெள்ளைத் தாமரைகள் சகோதரி லதாவின் வாழ்நாளை குறிப்பதாக பிரதமர் மேலும் கூறினார்.
இந்த புதுமையான முயற்சிக்காக உத்தரபிரதேச அரசு மற்றும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தை பிரதமர் பாராட்டினார், நாட்டு மக்கள் அனைவரின் சார்பாக சகோதரி லதாவுக்கு தனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்தினார். “அவரது மெல்லிசை பாடல்கள் மூலம் அவரது வாழ்விலிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்கள், எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்று நான் கடவுள் ஸ்ரீராமரிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் மேலும் கூறினார்.
சகோதரி லதாவின் பிறந்தநாள் தொடர்பான பல உணர்ச்சிகரமான மற்றும் அன்பான நினைவுகள் பற்றிய குறிப்பிட்ட பிரதமர், அவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் அவரது பிரபலமான குரலின் இனிமை தன்னை ஈர்த்தது என்று கூறினார்.“சகோதரி லதா, அடிக்கடி என்னிடம் கூறுவது: ‘மனிதன் வயதினால் அறியப்படுவதில்லை, செயல்களால் அறியப்படுகிறான், மேலும் அவன் நாட்டிற்கு எவ்வளவு செய்கிறானோ, அவ்வளவு பெரியவன்!” என்று தொடர்ந்த திரு மோடி, “அயோத்தியின் லதா மங்கேஷ்கர் சதுக்கம் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைத்து நினைவுகளும் நாட்டின் மீதான கடமை உணர்வை உணர்த்த உதவும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைக்குப் பிறகு சகோதரி லதாவிடம் இருந்து தமக்கு அழைப்பு வந்ததை நினைவுகூர்ந்த பிரதமர், இறுதியாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சகோதரி லதா மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகக் கூறினார். சகோதரி லதா பாடிய ‘மன் கி அயோத்தி தாப் தக் சூனி, ஜப் தக் ராம் நா ஆயே’ என்ற பாடலை நினைவு கூர்ந்த பிரதமர், அயோத்தியின் பிரமாண்ட கோவிலுக்கு பகவான் ஸ்ரீ ராமர் உடனடியாக காட்சி கொடுத்தது போல் இருந்தது என்று குறிப்பிட்டார். கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் ராமரை நிறுவிய சகோதரி லதாவின் பெயர் தற்போது புனித நகரமான அயோத்தியுடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். ராம் சரித் மானஸை மேற்கோள் காட்டிய பிரதமர் “ராம் தே ஆதிக், ராம் கர் தாசா” என்று பாடினார். அதாவது ராமரின் பக்தர்கள் கடவுளின் வருகைக்கு முன்பே வந்துவிடுவார்கள். எனவே, அவரது நினைவாக கட்டப்பட்ட லதா மங்கேஷ்கர் சதுக்கம், பிரமாண்ட கோவில் கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே நிறுவப்பட்டுள்ளது.
அயோத்தியின் பெருமைமிக்க பாரம்பரியத்தை மீண்டும் நிலைநிறுத்துவதையும், நகரத்தில் வளர்ச்சியின் புதிய விடியலையும் எடுத்துரைத்த பிரதமர், பகவான் ராமர் நமது நாகரிகத்தின் அடையாளம் என்றும், நமது ஒழுக்கம், பண்பாடு, கண்ணியம் , கடமை ஆகியவற்றின் வாழும் லட்சியமாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். “அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரை, இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் ராமர் இடம்பெற்றுள்ளார்” என்று மோடி மேலும் கூறினார். ராமரின் ஆசீர்வாதத்துடன் கோவில் கட்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதைக் கண்டு நாடு பரவசமடைந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
லதா மங்கேஷ்கர் சதுக்க இடம் அயோத்தியில் உள்ள பல்வேறு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கும் முக்கிய தளங்களில் ஒன்றாகும் என்று பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்த சதுக்கம் ராம் கி பைடிக்கு அருகிலும், சரயு புனித நதிக்கு அருகிலும் உள்ளது. “சகோதரி லதாவின் பெயரில் ஒரு சதுக்கத்தை கட்ட இதைவிட, சிறந்த இடம் எது?”, என்று பிரதமர் ஆச்சரியப்பட்டார். பல யுகங்களுக்குப் பிறகு அயோத்தி, ராமரைப் பெற்ற விதம் குறித்து கற்பனையோடு கூறிய பிரதமர், சகோதரி லதாவின் கீர்த்தனைகள் மூலம் நமது மனம் கடவுள் ராமரில் மூழ்கியதாக கூறினார்.
அது மானஸ் மந்திரமான ‘ஸ்ரீ ராமச்சந்திர கிருபாலு பஜ் மன், ஹரன் பவ பய தருணம்‘ அல்லது மீராபாயின் ‘பயோ ஜி மைனே ராம் ரத்தன் தன் பயோ‘ போன்ற கீர்த்தனைகளாக இருக்கலாம்; பாபுவுக்குப் பிடித்த ‘வைஷ்ணவ் ஜான்’ ஆகட்டும், அல்லது ‘தும் ஆஷா விஸ்வாஸ் ஹமாரே ராம்’ போன்ற இனிய மெல்லிசைப் பாடல்களாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தாலும், லதாவின் பாடல்கள் மூலம் பல நாட்டு மக்கள் ராமரை உணர்ந்திருக்கிறார்கள் என்று பிரதமர் கூறினார். “சகோதரி லதாவின் தெய்வீகக் குரல் மூலம் கடவுள் ராமரை உணர்ந்தோம் ” என்று திரு மோடி மேலும் கூறினார்.
சகோதரி லதாவின் குரலில் ‘வந்தே மாதரம்’ என்ற பாடலை கேட்கும்போது, பாரத அன்னையின் பரந்த வடிவம் நம் கண்முன் தோன்றத் தொடங்குகிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், “சகோதரி லதாவின் குடிமைப் பணிகளில் எப்போதும் மிகுந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பது போலவே, அயோத்தியில் வாழும் மக்களுக்கும், அயோத்திக்கு வரும் மக்களுக்கும் கடமையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த சதுக்கம் ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் மேலும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த சதுக்கம், இந்த வீணை அயோத்தியின் வளர்ச்சியையும், அயோத்தியின் உத்வேகத்தையும் மேலும் எதிரொலிக்கும்“என்று கூறினார். சகோதரி லதாவின் பெயரிடப்பட்டுள்ள இந்த சதுக்கம், கலை உலகத்துடன் தொடர்புடைய மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் இடமாக செயல்படும் என்று திரு மோடி சுட்டிக்காட்டினார். நவீனத்துவத்தை நோக்கி நகரும்போதும், அதன் வேர்களோடு இணைந்திருக்கும்போதும் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல இது அனைவருக்கும் நினைவூட்டும் என்று தெரிவித்தார். “இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் கொண்டு செல்வது நமது கடமை” என்று திரு மோடி மேலும் கூறினார்.
தனது உரையில் நிறைவாகப் பேசிய பிரதமர், இந்தியாவின் ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் அதே வேளையில், இந்தியாவின் கலாச்சாரத்தை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “சகோதரி லதாவின் குரல் இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இனி வரும் காலங்களில் இணைக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.
**************
(Release ID: 1862872)
IR-RS-SMB
In Lata Didi’s honour a Chowk is being named after her in Ayodhya. https://t.co/CmeLVAdTK5
— Narendra Modi (@narendramodi) September 28, 2022
लता जी, मां सरस्वती की एक ऐसी ही साधिका थीं, जिन्होंने पूरे विश्व को अपने दिव्य स्वरों से अभिभूत कर दिया: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2022
लता दीदी के साथ जुड़ी मेरी कितनी ही यादें हैं, कितनी ही भावुक और स्नेहिल स्मृतियाँ हैं।
— PMO India (@PMOIndia) September 28, 2022
जब भी मेरी उनसे बात होती, उनकी वाणी की युग-परिचित मिठास हर बार मुझे मंत्र-मुग्ध कर देती थी: PM @narendramodi
मुझे याद है, जब अयोध्या में राम मंदिर निर्माण के लिए भूमिपूजन संपन्न हुआ था, तो मेरे पास लता दीदी का फोन आया था।
— PMO India (@PMOIndia) September 28, 2022
वो बहुत खुश थीं, आनंद में थी। उन्हें विश्वास नहीं हो रहा था कि आखिरकार राम मंदिर का निर्माण शुरू हो रहा है: PM @narendramodi
अयोध्या के भव्य मंदिर में श्रीराम आने वाले हैं।
— PMO India (@PMOIndia) September 28, 2022
और उससे पहले करोड़ों लोगों में राम नाम की प्राण प्रतिष्ठा करने वाली लता दीदी का नाम, अयोध्या शहर के साथ हमेशा के लिए स्थापित हो गया है: PM @narendramodi
प्रभु राम तो हमारी सभ्यता के प्रतीक पुरुष हैं।
— PMO India (@PMOIndia) September 28, 2022
राम हमारी नैतिकता के, हमारे मूल्यों, हमारी मर्यादा, हमारे कर्तव्य के जीवंत आदर्श हैं।
अयोध्या से लेकर रामेश्वरम तक, राम भारत के कण-कण में समाये हुये हैं: PM @narendramodi
लता दीदी के नाम पर बना ये चौक, हमारे देश में कला जगत से जुड़े लोगों के लिए भी प्रेरणा स्थली की तरह कार्य करेगा।
— PMO India (@PMOIndia) September 28, 2022
ये बताएगा कि भारत की जड़ों से जुड़े रहकर, आधुनिकता की ओर बढ़ते हुए, भारत की कला और संस्कृति को विश्व के कोने-कोने तक पहुंचाना, ये भी हमारा कर्तव्य है: PM @narendramodi
भारत की हजारों वर्ष पुरानी विरासत पर गर्व करते हुए, भारत की संस्कृति को नई पीढ़ी तक पहुंचाना, ये भी हमारा दायित्व है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) September 28, 2022