Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அயோத்தியில் குழந்தை ராமர் சிலை  பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி அனைவருக்கும் பிரதமர்வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அயோத்தியில் குழந்தை ராமர் சிலை புனிதப்படுத்தப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு தினமான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். “பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்தக் கோவில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் சிறந்த பாரம்பரியம்” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது; 
“அயோத்தியில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பல நூற்றாண்டு கால தியாகம், தவம் மற்றும் போராட்டத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இந்த தெய்வீக-பிரமாண்ட ராமர் கோயில், நமது கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மகத்தான பாரம்பரியம் என்று நான் நம்புகிறேன். இது வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்கை அடைவதில் பெரும் உத்வேகமாக மாறும்”

*************

SG/PKV/KV