Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, ஏப்ரல் 14 அன்று பிரதமர் ஹரியானா செல்கிறார்


அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 14 அன்று ஹரியானா செல்கிறார்  அவர் ஹிசாரில் இருந்து அயோத்திக்கு வணிக விமானத்தை கொடியசைத்து தொடங்கி வைப்பார். ஹிசார் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவார். பொதுக் கூட்டத்திலும் அவர் உரையாற்றுவார்.

அதன் பின், மதியம் 12:30 மணியளவில், யமுனாநகரில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். இந்த நிகழ்வில் கூடியிருபோரிடையே உரையாற்றுவார்.

விமானப் பயணத்தை பாதுகாப்பானதாகவும், குறைந்த செலவில் வழங்கக்கூடியதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க,ஹிசாரில் உள்ள மகராஜா அக்ரசென் விமான நிலையத்தில்  ரூ.410 கோடி மதிப்புள்ள புதிய முனையக் கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இதில் அதிநவீன பயணிகள் முனையம், சரக்கு முனையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை ஆகியவை அடங்கும். ஹிசாரில் இருந்து அயோத்திக்கு முதல் விமானத்தையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். ஹிசாரிலிருந்து அயோத்திக்கு வாரத்திற்கு இரண்டு விமானங்களும், ஜம்மு, அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகருக்கு வாரத்திற்கு மூன்று விமானங்களும் இயக்கப்படும். இது  ஹரியானாவின் விமான இணைப்பில் குறிப்பிடத்தக்க பாய்ச்சலைக் குறிக்கும்.

மின்சார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, கடைசி மைல் வரை மின்சாரம் செல்லும் தொலைநோக்குப் பார்வையுடன், யமுனாநகரில் தீனபந்து சோட்டு ராம் அனல் மின் நிலையத்தின் 800 மெகாவாட் நவீன அனல் மின் அலகுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். சுமார் ரூ.8,470 கோடி மதிப்புள்ள 233 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலகு, ஹரியானாவின் எரிசக்தி தன்னிறைவை கணிசமாக அதிகரிக்கும்; மாநிலம் முழுவதும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்கும்.

கோபர்தன் – அதாவது கரிம உயிரி-வேளாண் வளங்களை பாதுகாத்தல் – என்ற தனது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், யமுனாநகரில் உள்ள முகராப்பூரில் ஒரு சுருக்கப்பட்ட உயிரி எரிவாயு ஆலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த ஆலை ஆண்டுக்கு 2,600 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும், மேலும் இது திறம்பட கரிம கழிவு மேலாண்மைக்கு உதவும், அதே நேரத்தில் சுத்தமான எரிசக்தி உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும்.

பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் சுமார் ரூ.1,070 கோடி மதிப்பிலான 14.4 கி.மீ ரேவாரி புறவழிச் சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இது ரேவாரி நகர போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும், தில்லி-நர்னால் பயண நேரத்தை சுமார் ஒரு மணி நேரம் குறைக்கும். இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை அதிகரிக்கும்.

****

SMB/DL