அமெரிக்க வெளியுறவு அமைச்சர் திரு ஜான் கெர்ரிவர்த்தகத் துறை அமைச்சர் திரு பென்னி பிரிட்ஸ்கெர் ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்த 2 அமைச்சர்களும் புது தில்லியில் நேற்று முடிவடைந்த 2 – வது இந்தியா – அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு முக்கியத்துவம் மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். 2016 ஜூன் மாதம் பிரதமர் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டதன் பின்னர் இரு தரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். இந்த மண்டலத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் மேம்பாடு குறித்த அமெரிக்காவின் நெடுநோக்கு குறித்து அமைச்சர் கெர்ரி பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள முக்கியமான உறவுகள் விரிவாகி வலுப்பட்டிருப்பது குறித்து பிரதமர் மனநிறைவினை தெரிவித்தார். இதனால் ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகள் தோன்றியுள்ளன. சமீபத்தில் ஜூன் மாதம் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அதிபர் ஒபாமாவுடன் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் வெற்றிகரமாக நிறைவடைவது மற்றும் விரைவான முன்னேற்றத்தை எதிர் நோக்கி இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.
சீனாவில் ஹாங்ஜோ நகரில் நடைபெறவுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் போது அதிபர் ஒபாமாவுடன் சந்தித்துப் பேசுவதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
The Secretary of State, USA, Mr. @JohnKerry meets PM @narendramodi. @StateDept pic.twitter.com/dh9Um2FeVt
— PMO India (@PMOIndia) August 31, 2016