Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க புத்தமத அறிஞரும் கல்வியாளருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனுடனான பிரதமரின் சந்திப்பு

அமெரிக்க புத்தமத அறிஞரும் கல்வியாளருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனுடனான பிரதமரின் சந்திப்பு


அமெரிக்க புத்தமத அறிஞரும், எழுத்தாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான பேராசிரியர் ராபர்ட் துர்மனை பிரதமர் திரு நரேந்திர மோடி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று சந்தித்துப் பேசினார்.

சர்வதேச சவால்களுக்கு தீர்வு காண்பதில் புத்தமதக் கொள்கைகள் எவ்வாறு வழிகாட்டும் என்பது குறித்து பிரதமரும், பேராசிரியர் துர்மனும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.   இந்தியாவின் புத்தமதத் தொடர்பு, புத்த பராம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் முயற்சிகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

******

(Release ID: 1933800)  

SM/IR/KPG/KRS