Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் பிரதமரின் உரை


சபாநாயகர் அவர்களே,

துணை அதிபர் அவர்களே,

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மதிப்புமிகு உறுப்பினர்களே,

சீமான்களே, சீமாட்டிகளே,

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்த எனக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்காக நான் ஆழ்ந்த பெருமிதமடைகிறேன்.

இந்த அற்புதமான அவையின் கதவுகள் திறந்து விடப்பட்டதற்காக சபாநாயகருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் இந்த ஆலயம் உலகம் முழுவதும் உள்ள இதர ஜனநாயகங்களுக்கு ஊக்கத்தையும் அதிகாரத்தையும் அளித்துள்ளது.

ஆபிரஹாம் லிங்கனின் வார்த்தைகளில் “அனைத்து மனிதர்களும் சமமாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்ற விகிதாச்சாரத்திற்கு அர்ப்பணித்துக் கொண்ட சுதந்திரத்துடன் இது உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்படும் இந்தப் பெரிய தேசத்தின் உணர்வை இது கொண்டுள்ளது.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்திருப்பதன் மூலம் நீங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தையும் அதன் 125 கோடி மக்களையும் கவுரவித்திருக்கிறீர்கள்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, இங்குள்ள தலைவர்களிடையே பேசுவதை நான் பெருமையாக உணர்கிறேன்.

சபாநாயகர் அவர்களே,

கடந்த இரு தினங்களுக்கு முன், இந்த மாபெரும் தேசத்தின் துடிப்பான வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆர்லிங்டன் தேசிய நினைவிடத்திற்கு சென்று எனது பயணத்தைத் தொடங்கினேன்.

சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்காக அவர்களது துணிச்சல் மற்றும் தியாகத்தை கவுரவித்தேன்.

அது டி-தினத்தின் 72வது நினைவு தினமாகும்.

அந்த நாளில்தான் இந்த தேசத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களுக்கே தெரியாத நிலத்தில் சுதந்திர ஜோதியை பாதுகாப்பதற்காக போராடினார்கள்.

அவர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்ததால் உலகம் சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சுதந்திர பூமி மற்றும் துணிச்சலானவர்களின் இல்லத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மனிதகுலத்திற்காக சேவையாற்றுவதில் செய்த பெரும் தியாகத்தை நான் பாராட்டுகிறேன்… இந்தியாவே பாராட்டுகிறது.

இதற்காகவே தொலைதூர போர்க்களங்களில் எங்களது வீரர்களும் ஈடுபட்டனர் என்பதால் இதன் பொருள் என்ன என்பதை இந்தியா அறியும்.

இதனால் தான் விடுதலை மற்றும் சுதந்திரம் என்ற நூலிழை நமது இரண்டு ஜனநாயகங்களுக்கு இடையே வலிமையான இணைப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபாநாயகர் அவர்களே,

நமது தேசங்கள் வெவ்வேறு வரலாறுகள், கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகளால் வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

இருந்தபோதிலும், நமது தேசங்களுக்கான ஜனநாயகம் மற்றும் நமது நாட்டு மக்களுக்கான சுதந்திரம் ஆகியவற்றில் நமது நம்பிக்கை பொதுவானதுதான்.

அனைத்து குடிமக்களும் சமமாகத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என அமெரிக்க அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருப்பது ஒரு மையத்தூணாகும்.

நமது முன்னோர்களும் இதே நம்பிக்கையை கொண்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்று விரும்பினார்கள்.

புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை வைத்த போது சந்தேகத்தை வெளிப்படுத்திய பலர் இருந்தனர்.

உண்மையில் எங்களது தோல்விகள் குறித்து பந்தயம் கட்டப்பட்டது.

ஆனால் இந்தியர்கள் தடுமாறவில்லை.

எங்களது முன்னோர்கள் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமநிலை ஆகியவற்றை தனது ஆன்மாவில் மையமாகக் கொண்ட ஒரு நவீன தேசத்தை உருவாக்கினார்கள்.

அவ்வாறு செய்வதில் எங்களது பழமையான பரவலாக்கத்தை அவர்கள் உறுதி செய்தார்கள்.

இன்று அதன் தெருக்கள் மற்றும் நிறுவனங்களில், அதன் கிராமங்கள் மற்றும் நகரங்களில், அனைத்து நம்பிக்கைகளின் மீதும் சம அளவிலான மரியாதையும், அதன் நூற்றுக்கணக்கான மொழிகள் மற்றும் பேச்சுக்களில் மென்மை உள்ளது.

இந்தியா ஒன்றாகவே வாழ்கிறது, இந்தியா ஒன்றாகவே வளர்கிறது, ஒன்றாகவே கொண்டாடுகிறது.

சபாநாயகர் அவர்களே,

நவீன இந்தியா தனது 70வது வயதில் உள்ளது.

எனது அரசைப் பொருத்தவரையில் அரசியல் சட்டம்தான் அதன் உண்மையான புனித நூல்.

மேலும் அந்தப் புனித நூலில் நம்பிக்கை, பேச்சு மற்றும் உரிமை, எந்தப் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் குடிமக்களின் சமத்துவம் ஆகியவை அடிப்படை உரிமைகளாக புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

எனது நாட்டின் 80 கோடி மக்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் எங்களது 125 கோடி மக்களுக்கும் அச்சத்தில் இருந்து விடுதலை, இருப்பதால் அவர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

மதிப்புமிகு உறுப்பினர்களே,

நமது சிந்தனையாளர்கள் ஒருவர் மீது மற்றவர் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர், நமது சமுதாய செயல்பாடுகளை வடிவமைக்கிறார்கள் என்பதில் தான் நமது ஜனநாயகங்களுக்கு இடையிலான ஈடுபாடு புலப்படும்.

ஒத்துழையாமை என்ற தோரியோசின் சிந்தனை நமது அரசியல் சிந்தனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதே போல் இந்தியாவின் பெருந்துறவியான சுவாமி விவேகானந்தர், மனிதநேயத்தை பின்பற்றுமாறு சிகாகோவில் கேட்டுக் கொண்டார்.

காந்தியின் அகிம்சை, மார்ட்டின் லூதர் கிங் வீரத்திற்கு ஊக்கமளித்தது.

இன்று டைடல் பேசினில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் நினைவிடத்திற்கும் மசாசூசெட்ஸ் அவென்யுவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் உள்ள இடைவெளி வெறும் 3 மைல்கள்தான்.

வாஷிங்டனில் அவர்கள் இருவரது நினைவிடங்களுக்கும் இடையே உள்ள இந்த நெருக்கம் அவர்களது எண்ணங்கள் மற்றும் மதிப்புகளின் மீதான நம்பிக்கையின் பிம்பமாக உள்ளது.

நூறாண்டுகளுக்கு முன்பு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் செலவழித்த சில ஆண்டுகளில் தான் அவர்களது அறிவாற்றல் வளர்ந்தது.

அமெரிக்க அரசியல் சட்டம் அவரிடம் ஏற்படுத்திய தாக்கம், முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவர் இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய போது பிரதிபலித்தது.

சுதந்திரத்திற்கான உங்களது போராட்டத்திற்கு ஊக்கம் அளித்த அதே கொள்கை தான் எங்களுக்கும் ஊக்கத்தை அளித்தது.

இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டணிகள் என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

நாம் பகிர்ந்து கொண்ட சிந்தனைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய பொதுவான கொள்கை நமது இணைப்புக்கான அடித்தளமாக இருந்ததில் எந்த வியப்பம் இல்லை.

நமது கூட்டணியை 21ம் நூற்றாண்டுக்கான கூட்டணி என்று அதிபர் ஒபாமா கூறியிருப்பதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை.

சபாநாயகர் அவர்களே,

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இதே இடத்தில் நின்று கொண்டு கடந்த காலத்திற்கான தயக்கத்தின் நிழல்களில் இருந்து வெளியே வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நமது நட்பின் பக்கங்கள் அது முதல் ஒரு குறிப்பிடத்தக்க கதையைச் சொல்கிறது.

இன்று நமது உறவு வரலாற்றின் தயக்கங்களில் இருந்து வெளியேறியுள்ளது.

வசதி, கள்ளங்கபடமற்ற மற்றும் குவிப்பு ஆகியவை நமது கலந்துரையாடல்களை விவரிக்கிறது.

தேர்தல்கள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் என்னும் சுழற்சியின் மூலமாக நமது ஈடுபாடு தீவிரமடைந்துள்ளது.

ஆச்சரியமூட்டும் இந்தப் பயணத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் வழியாட்டியாக செயல்பட்டுள்ளது.

இந்த கூட்டணியில் தடைகளை பாலங்களாக நாங்கள் மாற்ற நீங்கள் உதவினீர்கள்.

2008ம் ஆண்டு இறுதியில் இந்திய அமெரிக்க சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்படிக்கையை நாடாளுமன்றம் நிறைவேற்றிய போது, அது நமது உறவின் இலைகளின் நிறத்தை மாற்றியது.

இந்த உறவில் உங்களது தேவை அதிகமாக இருந்தபோது நீங்கள் அங்கு இருந்ததற்காக உங்களுக்கு எங்களுடைய நன்றிகள்.

துயரமான நீங்களிலும் நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள்.

2008 நவம்பரில் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்திய போது அமெரிக்க நாடாளுமன்றம் காண்பித்த நல்லிணக்கத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது.

இதற்காக நாங்கள் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சபாநாயகர் அவர்களே,

அமெரிக்க நாடாளுமன்றம் நல்லிணக்கத்துடன் செயல்படுவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

உங்களது இருகட்சி முறைக்காக நீங்கள் நன்கு அறியப்பட்டிருப்பதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

நீங்கள், மட்டுமல்ல,

இதேபோன்ற உணர்வை இந்திய நாடாளுமன்றத்தில் குறிப்பாக மேல் சபையில் நான் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறேன்.

எனவே எங்களிடம் பல பகிரப்பட்ட நடைமுறைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

சபாநாயகர் அவர்களே,

சாமானிய மனிதர்களுக்கும் நன்றாக தெரிந்திருப்பது போல், ஒவ்வொரு பயணத்திற்கும் அதன் முன்னோடிகள் உண்டு.

முன்னதாகவே அவர்கள், சந்திப்புக்கான நிலம் வரையறுக்கப்பட்டதாக இருந்த போதிலும் வளர்ச்சிக்கான கூட்டணியை அவர்கள் வடிவமைத்தார்கள்.

நார்மன் போலிங்கின் அறிவாற்றல் இந்தியாவுக்கு பசுமைப் புரட்சியையும் உணவுப் பாதுகாப்பையும் கொண்டு வந்தது.

அமெரிக்க பல்கலைக்கழகங்களின் நிபுணத்துவம் இந்தியாவில் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை பயிற்சி மையங்களை உருவாக்கியது.

இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாம் தழுவிய கூட்டணி கடல் ஆழத்திலிருந்து விண்வெளியின் படர்ந்த பகுதி வரை ஒட்டுமொத்த மனித விருப்பங்கள் வரை நீடித்தது.

பொது சுகாதாரம், கல்வி, உணவு மற்றும் வேளாண்மை துறைகளில் உள்ள மிகப் பழமையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைப்பு தொடர்ந்து உதவி வருகிறது.

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகள் அதிகரித்து வருகிறது. எந்தவொரு நாட்டை விடவும் நாங்கள் அமெரிக்காவுடன் அதிக வணிகம் செய்து வருகிறோம்.

சரக்குகள், சேவைகள் மற்றும் மூலதனங்கள் நமக்கு இடையே இருப்பது, நமது இரு சமூகங்களிலும் வேலைகளை உருவாக்குகின்றன. வர்த்தகத்தில் இருப்பது போல், பாதுகாப்பிலும் ஒத்துழைப்பு உள்ளது. இதர கூட்டாளிகளுடன் மேற்கொள்வதை விட நாம் அமெரிக்காவுடன் அதிக பயிற்சிகளை செய்து வருகிறோம். பத்தாண்டுக்கும் குறைவான காலத்தில் ராணுவ தளவாடங்கள் வாங்குவது பூஜ்யத்திலிருந்து பத்து பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்துள்ளது.

நமது ஒத்துழைப்பு நமது நகரங்கள் மற்றும் குடிமக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பதுடன், சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து நமது முக்கிய உள்கட்டமைப்புக்களையும் பாதுகாக்கிறது.

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு என்பது, நான் நேற்று அதிபர் ஒபாமாவிடம் கூறியது போல் நிஜமாகியுள்ளது.

சபாநாயகர் அவர்களே

நமது மக்களுக்கு இடையிலான இணைப்புகள் வலிமையாக உள்ளன என்பதுடன் நமது சமூகங்களுக்கு இடையே உள்ள கலாச்சார இணைப்பு நெருக்கமாக உள்ளது.

இந்தியாவின் பழமையான பாரம்பரியமான யோகாவை அமெரிக்காவில் 30 மில்லியன் பேர் பயிற்சி செய்வதாக எஸ்.ஐ.ஆர்.ஐ. கூறியுள்ளது.

பந்தை வீசி விளையாடும் விளையாட்டுக்காக வளைவதை விட யோகா செய்வதற்காக அமெரிக்கர்கள் அதிக அளவில் வளைவதாக கணிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அவர்களே, நாங்கள் யோகாவுக்காக இதுவரை அறிவுசார் சொத்து உரிமையைக் கோரவில்லை.

நமது இரண்டு நாடுகளையும் இணைக்கும் ஒரு பிரத்யேகமான அம்சமாக மூன்று மில்லியன் இந்திய அமெரிக்கர்கள் உள்ளனர்.

சிறந்த முதன்மை செயல் அதிகாரிகளாக, கல்வியாளர்களாக, விண்ணியல் அறிஞர்களாக, விஞ்ஞானிகளாக, பொருளாதார நிபுணர்களாக, மருத்துவர்களாக, ஏன், ஸ்பெல் பீ சாம்பியன்களாகவும் அவர்கள் இன்று உங்களிடையே உள்ளனர்.

அவர்கள் உங்களுடைய பலம். அவர்கள் இந்தியாவின் பெருமிதமாகவும் உள்ளனர். நமது இரண்டு சமூகங்களின் சிறப்புக்கான அடையாளமாக அவர்கள் உள்ளனர்.

சபாநாயகர் அவர்களே,

நான் பொதுப் பணியில் நுழைவதற்கு நீண்ட காலம் முன்னதாகவே நான் உங்கள் சீர்மிகுந்த நாட்டைப் பற்றி புரிந்து கொண்டேன்.

நான் பதவிக்கு வரும் முன்பே, அமெரிக்காவின் 25க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பயணம் செய்திருக்கிறேன்.

அமெரிக்காவின் பலம் என்பது அதன் மக்களின் கனவிலும் அவர்களது விருப்பங்களின் உறுதியிலும் உள்ளது என்பதை நான் உணர்ந்தேன்.

சபாநாயகர் அவர்களே, இன்று இத்தகைய உணர்வு இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது.

எங்களது 800 மில்லியன் இளைஞர்கள், குறிப்பாக பொறுமையிழந்தவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் தற்போது ஆழமான சமூக மற்றும் பொருளாதார மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதன் 100 கோடி மக்கள் ஏற்கெனவே அரசியல் ரீதியாக அதிகாரம் பெற்றவர்கள்.

பல்வேறு சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களின் மூலமாக அவர்களை பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற்றவர்களாக்க வேண்டும் என்பதே என் கனவு.

இதனை இந்தியா சுதந்திரம் பெற்ற எழுபத்தி ஐந்தாவது ஆண்டான 2022ல் செய்ய வேண்டும்.

நான் செய்ய வேண்டிய பணிகள் பட்டியல் நீளமானதாகவும் லட்சியம் நிறைந்ததாகவும் உள்ளது, இருந்தபோதிலும் இதனை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

அதில் இடம்பெற்றுள்ளவை :

தீவிர விவசாயத் துறையுடன் துடிப்பான கிராமப் பொருளாதாரம்

ஒவ்வொருக்கு வீடு மற்றும் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம்

நமது 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன் அளித்தல்

ஒரு கோடி பேருக்கு அகண்ட அலைவரிசை, மற்றும் டிஜிட்டல் உலகத்துடன் நமது கிராமங்களை இணைப்பது

மற்றும் ரயில், சாலை மற்றும் துறைமுக உள்கட்டமைப்புடன் இருபத்தியோராம் நூற்றாண்டை உருவாக்குவது

இவை வெறும் விருப்பங்கள் மட்டும் அல்ல, இவை உரிய காலகட்டத்தல் எட்டப்படும் இலக்குகள்,

இவை குறைந்த கரியமில கால் தடத்துடன், புதுப்பிகப்கத்தக்கவற்றுக்கு அதிக முக்கியத்துவதுனும் நிறைவேற்றப்படும்.

சபாநாயகர் அவர்களே,

இந்தியா முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு துறைகளிலும், அமெரிக்காவை தவிர்க்கமுடியாத பங்குதாரராக நான் பார்க்கிறேன்.

வலிமையான மற்றும் வளமான இந்தியா என்பது அமெரிக்காவின் உத்திபூர்வமான விருப்பங்களில் இருப்பதை உங்களில் பலர் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்.

பகிர்ந்து கொள்ளப்பட்ட சிந்தனைகளை செயல்பாட்டு ஒத்துழைப்பாக மாற்றுவதற்கு நாம் இணைந்து செயல்படுவோம்.

இந்த உறவை மேம்படுத்துவதில் இரு நாடுகளும் பெரிய அளவில் லாபமடையப் போகிறது என்பதில் சந்தேகம் எதுவும் இருக்கமுடியாது.

பொருளாதார வளர்ச்சிகான புதிய பகுதிகள், தங்கள் பொருட்களுக்கான புதிய சந்தைகள், திறன் பெற்ற ஆதாரங்களின் தொகுப்பு மற்றும் தயாரிப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய இடங்கள் ஆகியவற்றை அமெரிக்க வர்த்தகங்கள் தேடும் போது, இந்தியா அவர்களுக்கான ஏற்ற பங்குதாரராக இருக்கும்.

இந்தியாவின் வலிமையான பொருளாதாரம் மற்றும் 7.6 சதவிகித வளர்ச்சி விகிதம் புதிய வாய்ப்புகளை நமது பரஸ்பர வளத்திற்காக உருவாக்குகிறது.

மாற்றத்திற்கான அமெரிக்க தொழில்நுட்பங்கள் மற்றும் வளரும் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளுக்கு நமது மக்களின் வாழ்வில் நேர்மறையான தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

இன்று அவர்களது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களுக்கு இந்தியா அமெரிக்க நிறுவனங்களின் விருப்ப இடமாக மாறியுள்ளது.

இந்தியாவில் இருந்து பசிபிக் முழுவதும் கிழக்கு நோக்கி பார்க்கும் போது நமது இரண்டு நாடுகளின் புதுமை படைக்கும் வலிமை கலிபோர்னியாவில் இருந்து வருகிறது.

இங்கு அமெரிக்காவின் புதுமை படைக்கும் மேதாவித்தனம் மற்றும் இந்தியாவின் அறிவாற்றலுடன் கூடிய படைப்பாற்றல் எதிர்காலத்திற்கான புதிய தொழில்களை வடிவமைக்க செயல்படுகிறது.

சபாநாயகர் அவர்களே,

21ம் நூற்றாண்டு தன்னுடன் பெரும் வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.

ஆனால், அது தன்னுடைய சவால்களையும் கொண்டு வந்துள்ளது.

ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது அதிகரித்து வருகிறது.

ஆனால் உலகின் சில பகுதிகள் வளரும் பொருளாதாரத்தின் தீவுகளாக இருக்கும் போது இதர பகுதிகளில் சிக்கல்கள் உள்ளன.

ஆசியாவில் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பு நிச்சயமற்றதாக உள்ளது.

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்கள் விரிவாகி வருவதுடன், சைபர் மற்றும் வெளியிடங்களில் புதிய சவால்கள் உருவெடுத்து வருகின்றன.

20வது நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலகளாவிய அமைப்புகள் இந்தப் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாமலோ அல்லது புதிய பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள முடியாமலோ உள்ளது.

பல்வேறு மாற்றங்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் நிறைந்த இந்த உலகில், வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அரசியல் குழப்பங்கள், தற்போதைய அச்சுறுத்தல்கள் மற்றும் புதிய சவால்கள், நமது ஈடுபாட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த செய்யவேண்டியவை :

ஆதிக்கம் இல்லாத ஒத்துழைப்பு

தனிமைப்படுத்தப்படாத இணைப்புகள்

உலகளாவிய சாமானியர்களுக்கான மரியாதை

தனித்து அல்லாத அனைவரையும் உள்ளடக்கிய நுணுக்கங்கள் மற்றும் அதற்கு மேலாக

சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு கட்டுப்படுதல்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பை இந்தியா ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ளது.

வலிமையான இந்திய & அமெரிக்கக் கூட்டணி ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வரையிலும், இந்தியப் பெருங்கடல் முதல் பசிபிக் வரையிலும் அமைதி, வளம் மற்றும் நிலைத்த தன்மையை ஏற்படுத்த முடியும்.

இது வர்த்தகம் மற்றும் கடல் பாதையில் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த உதவ முடியும்.

ஆனால் 20ம் நூற்றாண்டு மனப்போக்குடன் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புக்கள் இன்றைய உண்மைகளை பிரதிபலித்தால் நமது ஒத்துழைப்புத் திறன் மேலும் அதிகரிக்கக்கூடும்.

சபாநாயகர் அவர்களே,

வாஷிங்டனுக்கு வரும் முன், நான் மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹிராத் சென்று அங்கு இந்திய உதவியுடன் கட்டப்பட்ட ஆப்கன் & இந்திய நட்பு அணை மற்றும் 42 மெகாவாட் நீர் மின் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தேன். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நான் நமது ஜனநாயகங்களின் ஆதாரமாக உள்ள நாடாளுமன்றத்தை அந்த நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக சென்றிருந்தேன்.

அமெரிக்கர்கள் செய்த தியாகம் சிறந்த வாழ்க்கையை உருவாக்க உதவியிருப்பதை ஆப்கன்கள் இயல்பாகவே அங்கீகரிக்கின்றனர்.

ஆனால் அதற்கும் மேலாக அந்தப் பிராந்தியத்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள நீங்கள் அளித்த பங்களிப்பு போற்றப்படுகிறது.

ஆப்கன் மக்களுடனான நமது நட்பை ஆதரிப்பதற்காக இந்தியாவும் ஏராளமான பங்களிப்பையும் தியாகங்களையும் செய்துள்ளது.

அமைதியான மற்றும் நிலையான மற்றும் வளாமான ஆப்கானிஸ்தானை மறு உறுவாக்கம் செய்ய வேண்டும் என்ற நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட நோக்கத்தில் உறுதி இருந்தது.

இருந்த போதிலும், உறுப்பினர்களே, ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்ல, தெற்காசியாவிலும், உலகளாவிய அளவிலும் பயங்கரவாதம் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

இந்தியாவின் மேற்கு எல்லை முதல் ஆப்ரிக்கா வரை உள்ள பல்வேறு பிரதேசங்களில் லஷ்கர் இ-தொய்பா, தாலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். என பல்வேறு பெயர்களில் இது உள்ளது.

எனினும் அதன் கொள்கை பொதுவானதுதான், வெறுப்பு, கொலை மற்றும் வன்முறை.

அதன் நிழல் உலகம் முழுவதும் பரவினாலும், இது இந்தியாவின் அண்டை நாட்டில் தான் வளர்க்கப்படுகிறது.

அரசியல் ஆதாயங்களுக்காக பயங்கரவாதத்தை போதிக்கும் மற்றும் பின்பற்றும் நாடுகளுக்கு ஒரு கடினமான எச்சரிக்கையை அனுப்பியதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எனது பாராட்டுக்கள்.

அவர்களது செயல்களுக்கு அவர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை அங்கீகரிக்க மறுப்பது முதல் நடவடிக்கையாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ராணுவத்தின் பாரம்பரிய உபகரங்கள், புலனாய்வு அல்லது தூதரக செயல்பாடுகள் மட்டும் இதை எதிர்த்து போரில் வெற்றியைத் தராது.

சபாநாயகர் அவர்களே,

அதனை எதிர்ப்பதில் நாம் இருவரும் அப்பாவி மக்கள் மற்றும் வீரர்களை இழந்திருக்கிறோம்.

நமது பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது தான் இந்த நேரத்தின் தேவை.

அது கொள்கையின் அடிப்படையாக வேண்டும் :

பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மற்றும் உதவுபவர்களை தனிமைப்படுத்த வேண்டும்

பயங்கரவாதத்தில் நல்ல மற்றும் மோசமானது என வேறுபடுத்தக்கூடாது, பயங்கரவாதத்தில் இருந்து மதம் விலக்கி வைக்கப்பட வேண்டும்

நாம் வெற்றி பெறுவதற்கு, மனிதநேயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஒன்றாக வந்து அதை எதிர்த்துப் போரிடுவதுடன், அதற்கு எதிராக ஒரே குரலில் பேச வேண்டும்.

பயங்கரவாதம் முற்றிலும் நெறியகற்றப்பட வேண்டும்.

சபாநாயகர் அவர்களே,

நமது கூட்டணியின் பயன்கள் தேவைப்படும் நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மட்டுமின்றி அதற்கும் மேல் விரிவடைய வேண்டும்.

நமது தனிப்பட்ட மற்றும் இணைந்த திறன்களின் மூலமாக நாம் ஏற்கெனவே நமது பொறுப்புகளை இதர உலகளாவிய சவால்களில் நமது பொறுப்புகளை காட்டி வருகிறோம். பேரிடர்கள் தாக்கும் போதும், மனிதநேய நிவாரண உதவிகளை தேவைப்படும் போதும் நாம் அதை செய்கிறோம்.

ஏமனில் இருந்து நாங்கள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் இதர நாடுகளை சேர்ந்தவர்களை அப்புறப்படுத்தினோம்.

நேபாளத்தில் பூகம்பம் தாக்கிய போதுதம், மாலத்தீவுகளில் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்ட போதும், மிக சமீபத்தில் இலங்கையில் நிலச்சரிவு ஏற்பட்ட போதும் நாங்கள் முதலில் சென்று உதவிக்கரம் நீட்டினோம்.

ஐநா அமைதி காக்கும் படையின் செயல்பாடுகளுக்கு நாங்கள் அதிக அளவில் படைகளை அனுப்பியவர்களில் நாங்களும் ஒருவர்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பசிக்கு எதிரான போரில் உதவி புதுமைகளைப் படைப்பதிலும், ஏழ்மை, நோய்கள் மற்றும் கல்வி அறிவின்மை ஆகியவற்றை உலகின் பல்வேறு பகுதிகளில் போக்க இந்தியாவிம் அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டுள்ளது.

நமது கூட்டணியின் வெற்றி, பயில்வது, பாதுகாப்பு மற்றும் ஆசியாவில் இருந்து ஆப்ரிக்கா வரையிலான முன்னேற்றத்திற்கும் பல்வேறு புதிய வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இந்த பூமியின் கவனிப்பு ஆகியவை நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட கண்ணோட்டத்தில் மையமாக உள்ளது.

இந்தியாவில் எங்களைப் பொருத்தவரையில், பூமித் தாயுடன் நல்லிணக்கமாக வாழ்வது என்பது எங்களது பண்டைய நம்பிக்கைகளில் ஒன்றாக உள்ளது.

மிகவும் அத்தியாவசியமானதை மட்டும் இயற்கையில் இருந்து எடுத்துக் கொள்வது என்பது எங்களது நாகரிகத்தில் ஒன்றாகும்.

எனவே நமது கூட்டணி என்பதை பொறுப்புக்களையும் திறன்களையும் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இருப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு புதிய வழிகளைக் காணவும் இது கண்ணோட்டம் கொண்டுள்ளது.

சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியை ஏற்படுத்துவது என்பது அமெரிக்காவின் வலிமையான ஆதரவு தேவைப்படும் நமது முயற்சிகளில் ஒன்றாகும்.

நாம் இணைந்து செயல்படுவது நமது சிறந்த எதிர்காலத்திற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தின் சிறந்த எதிர்காலத்திற்காகவும்.

ஜி-20, கிழக்கு ஆசிய உச்சிமாநாடு மற்றும் பருவநிலை மாற்றம் உச்சிமாநாடுகளில் இதுதான் நமது முயற்சிகளின் இலக்கு ஆகும்.

சபாநாயகர் மற்றும் மதிப்புமிக்க உறுப்பினர்களே,

நமது கூட்டணி ஆழப்படுத்தப்படும் போது நமக்குள் சில மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கக்கூடும்.

ஆனால் நமது ஆர்வங்கள் மற்றும் கவலைகள், முடிவு எடுப்பதில் சுயாட்சி மற்றும் நமது கண்ணோட்டங்களில் உள்ள பரவல் ஆகியவை மட்டுமே நமது கூட்டணியை மதிப்பானதாக ஆக்கும்.

எனவே, இந்த புதிய பயணத்தை நாம் மேற்கொண்டு, புதிய இலக்குகளை எதிர்நோக்கும் போது, நாம் வழக்கமான விஷயங்களில் மட்டுமின்றி நாடுகளுக்கு இடையிலான கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் செலுத்துவோம்.

நாம் கண்ணோட்டம் செலுத்த வேண்டியவை :

சொத்துக்களை உருவாக்குவதில் மட்டுமின்றி நமது சமூகத்தின் மீது மதிப்பை உருவாக்க வேண்டும்,

உடனடி லாபங்களை மட்டும் பார்க்காமல், நமது நீண்ட கால பயன்களையும் பார்க்க வேண்டும்.

சிறந்த நடைமுறைகளை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல், கூட்டணியை வடிவமைக்கவும் வேண்டும்

பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் மட்டுமின்றி, ஒற்றுமை, மனிதர்கள் மற்றும் வளமான உலகத்தின் இடையே பாலமாக இருக்க வேண்டும்.

மிக முக்கியமாக இந்தப் பயணத்தின் வெற்றிக்காக, இதனை புதிய கண்களுடன் புதிய உணர்வுகளுடன் பார்க்க வேண்டியதும் அவசியம்.

இதனை நாம் செய்யும் போது, இந்த சிறப்பு மிக்க உறவின் முழு உறுதிப்பாடடையும் உணரமுடியும்.

சபாநாயகர் அவர்களே,

எனது இறுதி சிந்தனைகள் மற்றும் வார்த்தை, நமது கூட்டணி ஒரு சிறந்த எதிர்காலத்திற்கானது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்.

கடந்த கால தடைகள் நமக்குப் பின்னால் தான் உள்ளது என்பது எதிர்காலத்திற்கான அடித்தளங்கள் உறுதியாக உள்ளன.

வால்ட் விட்மேன் வார்த்தைகளில் கூறினால்,

இசைக்குழு தனது இசைக் கருவிகளை போதுமான அளவு சீர்செய்துள்ளது. வழிகாட்டும் பிரம்பும் சமிக்ஞை கொடுத்துள்ளது.

நானும் இதில் சேர்ந்து கொண்டால் நல்ல சிம்பொனி இசைக்கப்படும்.

சபாநாயகர் மற்றும் மதிப்புமிக்க உறுப்பினர்களே, நீங்கள் அளித்த இந்த கவுரவத்திற்கு என் நன்றிகள்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.