Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பிரதமரைச் சந்தித்தார்

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் பிரதமரைச் சந்தித்தார்


அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் திரு. துல்சி கப்பார்ட் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

திருமிகு கப்பார்ட்டுடனான தமது முந்தைய கலந்துரையாடல்களைப் பிரதமர் அன்புடன் நினைவு கூர்ந்தார். இருதரப்பு உளவுத்துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்பு, இணையவழி குற்றங்களிலிருந்து பாதுகாப்பு, வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் உத்திசார் உளவுத்துறை பகிர்வு ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய நிலவரம் குறித்த கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக்கொண்டனர். பாதுகாப்பான, நிலையான மற்றும் விதிகளை மதித்து நடக்கும் சர்வதேச ஒழுங்கிற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

***

(Release ID: 2102557)
TS/PKV/RR/KR