Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபர் திரு பைடனுடன் பிரதமர் திரு மோடி பேச்சு


அமெரிக்க அதிபர் மேதகு திரு. ஜோசப் ஆர். பைடன், பிரதமர் திரு. நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களுக்கு இடையேயான வலுவான உறவுகள் ஆகியவற்றின் பகிரப்பட்ட மாண்புகளின் அடிப்படையில் இந்திய-அமெரிக்க விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையில் அதிபர்  திரு பைடன் கொண்டுள்ள ஆழ்ந்த உறுதிப்பாட்டிற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த தலைவர்கள், இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது என்பதை எடுத்துரைத்தனர்.

இரு தலைவர்களும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விரிவான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

உக்ரைன் நிலைமை குறித்து விவாதிக்கும் போது, ​​பிரதமர் திரு மோடி, உக்ரைனுக்கு சமீபத்தல்  தாம் மேற்கொண்ட  பயணம் குறித்து அதிபர் திரு பைடனுக்கு விளக்கினார்.பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு ஆதரவாக இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை விரைவில் திரும்புவதற்கு முழு ஆதரவையும் தெரிவித்தார்.

வங்கதேச நிலவரம் குறித்து இரு தலைவர்களும் தங்களது கவலையைப் பகிர்ந்து கொண்டனர். வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதையும், சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

குவாட் அமைப்பு உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

 

***

(Release ID: 2048970)

BR/KR