Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபருடன் பிரதமரின் சந்திப்பு

அமெரிக்க அதிபருடன் பிரதமரின் சந்திப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி 24 செப்டம்பர் 2021 அன்று அமெரிக்க அதிபர் மேதகு ஜோசப் ஆர். பைடனுடன் பயனுள்ள இணக்கமான சந்திப்பை நடத்தினார்.

ஜனாதிபதி பைடன் ஜனவரி 2021 இல் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும். இருதலைவர்களும் இந்தியாஅமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் திறனை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்பாக பயன்படுத்தினர். ஜனநாயக மதிப்புகளின் பாரம்பரியமான தூண்களின் அடிப்படையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக மதிப்புகள், தொழில்நுட்பம், வர்த்தகம், நம் மக்களின் திறமை, இயற்கையான நம்பகத்தன்மை எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு தசாப்த மாற்றத்திற்குள் நுழைகின்றன என்று பிரதமர் கூறினார். வருங்கால முன்னுரிமைகளை அடையாளம் காணும் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் வருடாந்திர இருதரப்பு அமைச்சர்கள் உரையாடல் உட்பட பல்வேறு துறைகளில் வரவிருக்கும் இருதரப்பு உரையாடல்களை தலைவர்கள் வரவேற்றனர்.

இரு தலைவர்களும் கோவிட்19 நெருக்கடி நிலைமை மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இந்தியாஅமெரிக்கா ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். இந்த சூழலில் அதிபர் பைடன் இந்தியாவின் தற்போதைய தடுப்பூசி முயற்சிகளைப் பாராட்டியதுடன், நமது கோவிட் உதவியை வழங்குவதற்கான உலகளாவிய அணுகுமுறையையும் பாராட்டினார்.

இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்துவதற்கு மகத்தான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த இரு தலைவர்களும், வர்த்தக தொடர்புகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அடையாளம் காண அடுத்த வர்த்தக கொள்கை கூட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூட்டப்படும் என்று ஒப்புக்கொண்டனர். இந்தியாஅமெரிக்கா பருவநிலை மற்றும் தூய இயற்கை ஆற்றல் நிகழ்ச்சிநிரல் 2030 கூட்டுறவின் கீழ், அவர்கள் தூய இயற்கை ஆற்றல் மேம்பாடு மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை துரிதப்படுத்த ஒப்புக்கொண்டனர். அமெரிக்காவில் உள்ள பெரிய இந்திய புலம்பெயர்ந்தோரை அங்கீகரித்த பிரதமர், இரு நாடுகளுக்கிடையே உள்ள  மக்களுக்கிடையேயான உறவுகளின் முக்கியத்துவத்தையும், இயக்கம் மற்றும் உயர்கல்வி இணைப்புகளை விரிவாக்குவதன் பரஸ்பர நன்மைகளையும் எடுத்துரைத்தார்.

தலைவர்கள் தெற்காசியாவில் ஆப்கானிஸ்தானின் நிலைமை உட்பட பிராந்திய வளர்ச்சிகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர், மேலும் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைந்து பணியாற்ற பகிர்ந்துகொண்ட தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர். மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும் கண்டித்தனர். தாலிபான்கள் தங்கள் கடமைகளை கடைபிடிக்க வேண்டும், அனைத்து ஆப்கானியர்களின் மனித உரிமைகளை மதிக்க வேண்டும் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு தடையற்ற மனிதாபிமான உதவியை அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆப்கானிஸ்தான் மக்களுக்கான நீண்டகால அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, இரு தலைவர்களும் இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து ஆப்கானிஸ்தானின் அனைவரையும் உள்ளடக்கிய அமைதியான எதிர்காலத்தை நோக்கி ஒருவருக்கொருவர் தங்கள் பங்குதாரர்களுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்று ஒப்புக்கொண்டனர்.

தலைவர்கள் இந்தியபசிபிக் பிராந்தியத்தைப் பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர், மேலும் வெளிப்படையான சுதந்திரமான பார்வையை உள்ளடக்கிய இந்தியபசிபிக் பிராந்தியத்திற்கான தங்கள் பகிரப்பட்ட பார்வையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.

 

பருவநிலை மாற்றம் மற்றும் பயங்கரவாதம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் திட்ட வரைமுறைகள் மற்றும் பகிரப்பட்ட நலன்களின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவும் அமெரிக்காவும் சர்வதேச நிறுவனங்களில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டன.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனையும், அவரது மனைவி டாக்டர் ஜில் பைடனையும் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இரு தலைவர்களும் தங்கள் உயர்மட்ட உரையாடலைத் தொடரவும், வலுவான இருதரப்பு உறவுகளை முன்னேற்றவும் மற்றும் அவர்களின் உலகளாவிய கூட்டாண்மையை வளப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.

***********