Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்கா-இந்தியா யுக்திபூர்வ ஒத்துழைப்புக்கான அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு


அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர்கள் அடங்கிய, அமெரிக்கா-இந்தியா யுக்திபூர்வ ஒத்துழைப்புக்கான அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இன்று (30.10.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

அப்போது, தங்களது சந்திப்புக்கு முன்பாக நடைபெற்ற இந்திய தலைமைப் பண்பு உச்சிமாநாட்டின் முடிவுகள் குறித்து பிரதமரிடம் இவர்கள் எடுத்துரைத்தனர். கடந்த நான்காண்டுகளில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார மற்றும் ஒழுங்குமுறை சீர்திருத்தங்களைப் பாராட்டிய தொழிலதிபர்கள், வேகமாக வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தால், இருதரப்புக்கும் பயனளிக்கக் கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவுடனான ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

பொருளாதார ஒத்துழைப்புகள் மூலம் இந்தியாவும், அமெரிக்காவும் இதற்கு முன் இல்லாத வகையில், பெருமளவுக்கு பலனடைந்திருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். அத்துடன், இந்தியாவில் புதிய தொழில்களைத் தொடங்குதல், எரிசக்தி, சுகாதார சேவைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில், வர்த்தக வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அமெரிக்க நிறுவனங்களை பிரதமர் ஊக்கப்படுத்தினார்.