Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்காவிலிருந்து 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை பிரதமர் நாட்டிற்கு கொண்டு வர உள்ளார்


பிரதமர் மோடியின் அமெரிக்க சுற்று பயணத்தின் போது 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் அமெரிக்காவால்  இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பழங்கால பொருட்களை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்தற்காக பிரதமர் தனது உயரிய பாராட்டை தெரிவித்தார். பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர், திருட்டு, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கலாச்சார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்து தங்கள் முயற்சிகளை வலுப்படுத்த உறுதியளித்தனர்.

157 கலைப்பொருட்களின் பட்டியலில் 10 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 1.5 மீட்டர் அளவுள்ள ரேவந்தாவின் மணல் சிற்பம், 12 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட 8.5 செமீ உயர நேர்த்தியான வெண்கல நடராஜர் உருவம் ஆகியவை அடங்கும். இந்த பொருட்கள் பெரும்பாலும் 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியையும், கிமு 2000 ஆம் ஆண்டின் தாமிர தொல்பொருள் மற்றும் 2 ஆம் நூற்றாண்டின் டெரகோட்டா குவளை போன்றவை வரலாற்றுப் பழங்காலத்தையும் சேர்ந்தவை. அத்துடன் சுமார் 45 தொல்பொருட்கள் பொதுவான சகாப்தத்திற்கு முந்தையவை.

கலைப்பொருட்களில் பாதி (71) தொல்பொருளாக இருந்தாலும், மற்ற பாதி இந்து மதம் (60), புத்தமதம் (16) மற்றும் சமண மதம் (9) ஆகியவற்றுடன் தொடர்புடைய சிலைகளைக் கொண்டுள்ளது.

அவை உலோகம், கல் மற்றும் டெரகோட்டா போன்றவைகளால் ஆனது. வெண்கல பொருட்களில் முதன்மையாக லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன், பார்வதி, 24 ஜைன தீர்த்தங்கரர்கள் மற்றும் குறைவாக அறியப்பட்ட கண்கலமூர்த்தி, பிராமி, நந்திகேசன் ஆகியோரின் புகழ்பெற்ற தோரணைகளில் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.

இந்து மதத்தில் இருந்து மத சிற்பங்கள் (மூன்று தலைகள் பிரம்மா, ரதம் ஓட்டும் சூர்யா, விஷ்ணு மற்றும் அவரது துணைவியார், சிவன் தட்சிணாமூர்த்தி, நடன விநாயகர் போன்றவை), புத்தமதம் (நிலை புத்தர், போதிசத்வ மஜுஸ்ரீ, தாரா) மற்றும் சமண மதத்தில்  (ஜெயின் தீர்த்தங்கரர், பத்மாசன தீர்த்தங்கரர், ஜெயினா செளபிசி) ஆகியவை இதில் அடங்கும். மற்றும் மதச்சார்பற்ற தொல்பொருள்கள் (சமபங்காவில் உருவமற்ற ஜோடி, யட்சி உருவம், பெண் டிரம் வாசித்தல் போன்றவை) ஆகும்.

56 டெரகோட்டா துண்டுகள் (குவளை 2 ஆம் நூற்றாண்டு, மான் ஜோடி 12 ஆம் நூற்றாண்டு, பெண் 14 வது நூற்றாண்டு மார்பளவு, மற்றும் 18 ஆம் நூற்றாண்டு வாள், பாரசீகத்தில் குரு ஹர்கோவிந்த் சிங் என்று கல்வெட்டுடன் உள்ளது)

உலகம் முழுவதிலுமிருந்து நமது தொல்பொருட்கள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் கொண்டுவர மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகள் இன்றும் தொடர்கிறது.

**************