Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்ப்புக்கு பிரதமர் வாழ்த்து


அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள திரு டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஒத்துழைக்கவும் அதிபர் திரு டிரம்புடன் நெருக்கமாக பணியாற்ற பிரதமர் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிபரின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய, அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

 

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிரதமர் தெரிவித்திருப்பதாவது:

“வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, அமெரிக்காவின் 47-வது அதிபராக  பதவியேற்கும்  எனது அருமை நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்ப் @realDonaldTrump அவர்களுக்கு வாழ்த்துகள். இரு நாடுகளின் நலனுக்காகவும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கவும் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் ஆவலாக இருக்கிறேன். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.”

TS/BR/KR

***