Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்காவின் முன்னணி வல்லுநர்களுடன் பிரதமரின் உரையாடல்

அமெரிக்காவின் முன்னணி வல்லுநர்களுடன் பிரதமரின் உரையாடல்


ஜூன் 23 அன்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜான் எப். கென்னடி மையத்தில் அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுநர்கள் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு  அமெரிக்கா-இந்தியா உத்திபூர்வ கூட்டாண்மை அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்  திரு. ஆண்டனி பிளிங்கனும்  இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிரதமர் தனது உரையில், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார்.  “இதுவே தருணம்” என்று வலியுறுத்திய பிரதமர், இந்தியாவுடன் கூட்டுறவை உருவாக்குமாறு  நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 1000 முன்னணி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

***

AD/PKV/DL