Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமிர்த நீர் நிலைகள் நமது பூமியில் நல்லிணக்கத்தை உறுதி செய்யும்: பிரதமர்


அம்ரித் சரோவர் எனப்படும் அமிர்த நீர் நிலைகளின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, நீர் சேமிப்பு மற்றும் சமூக பங்கேற்பை இந்த அமிர்த நீர் நிலைகள் ஏற்படுத்துவதுடன் கூடுதலாக, இவை நமது பூமியில் நல்லிணக்கத்தையும் உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.

 

 

அசாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சிங்ராவில் யானைகள் கோடைக் காலத்தில் நீராடுவது குறித்து அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

 

அருமையான காட்சி. நீர் சேமிப்பு மற்றும் சமூக பங்கேற்புடன் கூடுதலாக, இந்த அமிர்த நீர்நிலைகள் நம்முடன் பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள உயிரினங்களுடன் நல்லிணக்கத்தையும் உறுதி செய்கின்றன

 

(Release ID: 1943344)

*********
ANU/PLM/KRS